உள்நாடு

மேல் மாகாண தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இதற்கு முன்னரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கு தீர்வை வழங்கும் நோக்கில் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் அத் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13,000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related posts

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு