உள்நாடு

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டாரின் தோஹா விமான நிலையத்தில் இருந்து 28 பேர் இன்று(10) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜப்பானின் நரீட்டா விமான நிலையத்தில் இருந்து 148 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான UL 455 விசேட விமானம் மூலம், இன்று(10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, விமான நிலையங்களுக்கு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாடு திரும்பினார் பிரதமர்

பணி நீக்கம் செய்யப்பட்ட உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு