உள்நாடு

மேலும் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – லங்கா சதொச நிறுவனம் ஐந்து வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி , டின் மீன் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 238 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாவாகும், இது 96 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மீன் டின் ஒன்றின் விலை 105 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 585 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி புதிய விலை 1300 ரூபாவாகும், இது 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் புதிய விலை 398 ரூபாவாகும், இது 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்