உள்நாடு

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம், கொழும்பு மாவட்டத்தின் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்படப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

நாடு திரும்புவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

அச்சமில்லாது இலங்கைக்கு வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விஜித ஹேரத் அழைப்பு

editor

உரத்தின் விலை குறைகிறது : விவசாய அமைச்சர்