உள்நாடு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) –   இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட அமெரிக்காவின் “பைசர்” தடுப்பூசியில் மேலுமொரு தொகை, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டார் விமான ​சேவைக்குச் சொந்தமான பொருள்கள் ஏற்றியிறக்கும் விமானத்தின் ஊடாகவே 73,710 தடுப்பூசி மருந்துகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

445 கிலோகிராம் நிறையைக் கொண்ட இந்த தடுப்பூசி மருந்துகள் பொதியிடப்பட்டு, நெதர்லாந்து ஆம்ஸ்ட்டர்ஸ்டேம் நகரத்திலிருந்து கட்டார், தோஹாவுக்கு விமானத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமான கிவ்.ஆர்-668 எனும் பொருள்களை ஏற்றியிறக்கும் விமானத்தின் ஊடாக, இன்று (13) அதிகாலை 2.15க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

Related posts

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க பல்கலை மாணவர்கள் கோரிக்கை

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு