உள்நாடு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம்

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதியமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என கூறியது பிழையான செயல் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

SLFPயிலிருந்து 3 MPக்கள் நீக்கம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.