சூடான செய்திகள் 1

மேலும் அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.

எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிளாஸ்ரிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

நாளை பாராளுமன்றில் பொது மக்களுக்கான பார்வை கூடத்திற்கு பூட்டு

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

editor