உள்நாடு

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நான்கு விசேட விமானங்களின் மூலம் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டாரின் தோஹா இருந்து 20 பேர், சென்னையில் இருந்து 290 பேர், மேலும், குவைத்தில் இருந்து 266 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 169 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டுக்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையங்களில் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

இன்றும் மழை

தடை செய்யப்பட்ட 6 முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை நீக்கம்