உலகம்

மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரஷ்யா, பெரு, சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை விதித்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலவரப்படி, ஜப்பானில் கொரோனா வைரசால் 13,614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 385 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா – சர்ச்சையில் டிரம்ப்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்ய தீர்மானம்