உள்நாடுசூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்துவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராக்கல் மனு

வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, அவரது சட்டதரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான வேறு பல ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்குமாறும் குறித்த சீராக்கல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கோரப்பட்ட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சபாநாயகரின் அதிரடி தீர்மானம்…

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

சேமினியிடம் CID வாக்குமூலம்