சூடான செய்திகள் 1

மேஜர் ஜானக பெரேரா வழக்கு – இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

(UTV|COLOMBO) மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுர விசேட மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மற்றும் கம்பஹா சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ப்ரேமா சுவர்ணாதிபதி ஆகியோரால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி , முதல் மூன்று குற்றச்சாட்டுக்கு பிரதிவாதிக்கு 20 வருடங்கள் வீதம் 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதியரசர் குறித்த தண்டனை காலத்தை வேறு வேறாக கழிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதற்கு மேலதிகமாக , நான்காவது குற்றச்சாட்டு முதல் 31வது குற்றச்சாட்டு வரை பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்த நீதியரசர் குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல் , பிரதிவாதிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டது.

மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.

 

 

 

 

 

 

Related posts

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…