கிசு கிசு

மேகன் மெர்க்கல் கர்ப்பம்…

(UTV|UK)-பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகவும், 2019 இளவேனிற்காலத்தில் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ஆம் திகதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக சில முறை வதந்தி பரவியது.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக கெங்சிங்டன் அரண்மனை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், மெர்க்கல் வரும் 2019-ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் குழந்தையை எதிர்பார்க்கிறார் என்பதை இளவரசரும், இளவரசியும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன்

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்