உள்நாடு

மெனிங் சந்தையில் இன்று கிருமி நீக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – வெசாக் பூரணையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த புறக்கோட்டை மெனிங் சந்தையில் இன்று(10) கிருமிநீக்கம் நடவடிக்கை செய்யப்பட உள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நாளை(11) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மெனிங் சந்தை திறந்திருக்கும் என சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்தார்.

மெனிங் சந்தை நாளை(11) முதல் வழமைபோல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், சந்தைக்கு வரும் அனைத்து நபர்களும் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என்றும் உடனடியாக வர்த்தகத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்