கிசு கிசு

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு

(UTV|JAPAN)-ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்குமுக்காடி போகிறது.

இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய உத்தியை கையாள முடிவு செய்திருக்கிறது. ஆதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 முதல் 3000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

பெண்கள் எவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம்…

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…