சூடான செய்திகள் 1வணிகம்

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு

(UTV|COLOMBO) விசாக பூரணை மற்றும் தேசிய தொல்பொருள் தினம் என்பனவற்றின் காரணமாக  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

மேற்படி நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சிகிரியா திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற மேஜர் அநுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தப் பகுதியை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
சுற்றுலாத்துறையினர் பாதுகாப்புக்காக இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் சிகிரியா காவல்துறையினர் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் – சஜித்

விசா கட்டண விலக்களிப்பை மேலும் நீடிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு