உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

(UTVNEWS | COLOMBO) –இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க மலேசியா உதவி

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி