உள்நாடு

மூடப்படும் வீதிகள் தொடர்பில் வெளியான தகவல்

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒத்திகை இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு…

2025.01.29 காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.01.30 காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.01.31 காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.02.01. 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.02.02. 06.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் பின்வருமாறு…

கருவாத்தோட்டம் விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தை நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பகுதிக்குள் பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து மன்றக் கல்லூரி வீதி நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் ஹோர்டன் பிளேஸில் உள்ள மெட்லன்ட் கிரசன்ட் சந்திப்பிலிருந்து சுதந்திர சுற்றுவட்டத்திற்கு பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையிலிருந்து, மெட்லன்ட் கிரசன்ட் வழியாக சுதந்திர சுற்றுவட்டத்திற்கு பிரவேசித்தல்.

கருவாத்தோட்டம் தனிவழிப்பாதையில் இருந்து மெட்லன்ட் கிரசன்ட் நோக்கி பிரவேசித்தல்.

ஒத்திகை காலத்தில் இந்த வீதிகள் மூடப்படும் எனவும், அந்தப் பகுதியில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் ஒத்திகைப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயணிக்க இடமளிக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

  நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள்பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவிடம் கோரிக்கை