உள்நாடு

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

(UTV | கொழும்பு) –

 

பாதிக்கப்பட்ட , பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம் சிறுமிகள்,பெண்கள் மற்றும் வயோதிப பெண்களை பராமரித்து வரும் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் புதிதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமனம் பெற்ற திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை காப்பகத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி திருமதி சல்மா ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப்.ரிப்கா ஷபீன், பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் , அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி) மற்றும் காப்பகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள திருமதி ஜே.ஜே.முரளிதரன் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன். மாவட்ட செயலாளரிடம் காப்பகத்தின் பணிப்பாளர் சபையினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. காப்பகத்தின் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!