உள்நாடு

18 விசாரணை அறிக்கைகள் – திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய, 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,

அதன்படி, முழுமைப்படுத்தப்படாத 100 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு