சூடான செய்திகள் 1

முழு மானை விழுங்கிய இராட்சத பாம்பு!

(UTV|COLOMBO)-கல்கிரியாகம பரவஹகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இருந்து இராட்சத மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மான் ஒன்றை விழுங்கிய நிலையில் , நகர முடியாமல் மலைப்பாம்பொன்று உள்ளதாக கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் , குறித்த மலைப்பாம்பினை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

மலைப்பாம்பினால் விழுங்கப்பட்ட மானின் கால் பாம்பின் வயிற்றுப்பகுதியில் காயமேற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

இடியுடன் கூடிய மழை

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்