கேளிக்கை

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் “தர்பார்”

(UTV|INDIA) ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தர்பார் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் திகதி மும்பையில் தொடங்குகிறது. இந்த படத்தில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி பொலிசாக நடித்திருந்தார்.

அந்த படம் 1988ல் வெளியானது. 30 வருடம் கழித்து மீண்டும் இப்போது அவர் பொலிஸ் கேரக்டரில் இதில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

‘ஜகமே தந்திரம்’

தவறாக நடக்க முயன்ற கதாநாயகனை ஓங்கி அறைந்த ராதிகா