விளையாட்டு

மும்பையை பின்தள்ளி டில்லி முன்னிலையில்

(UTV | துபாய்) – ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கின. எனினும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், அதற்கு அடுத்த படியாக மும்பை அணியும் உள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்

லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம்…

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்