சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கும் மேற்படி முக்கியஸ்தர்களுக்குமிடையில் சிறு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

Related posts

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று கொழும்பில்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை