அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிசாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

editor

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!