உள்நாடு

முன்னாள் அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் அனைத்து இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை உரிய காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில், எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், இதுவரை உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்கவில்லை என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

மாணவர்களை அழைத்து வர நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்

கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் மரணம்