உள்நாடு

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளித்துள்ளதாகவும், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இரண்டாவது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டொலரின் பெறுமதி வலுக்கிறது

அர்ச்சுனா எம்.பிக்கு தற்காலிக தடை – இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு | வீடியோ

editor

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!