முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் வாக்குமூலம் பெறுவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.