அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (05) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மைத்திரி – தயாசிறிக்கு அழைப்பாணை

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்

´சிட்டி பஸ்´ அமுலுக்கு