அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் ஒக்டோபர் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ONLINE யில்.!

இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை