உள்நாடு

முச்சக்கரவண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து – யுவதி பலி

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, தந்தை மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேற்படி உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பஸ்சுடன் மோதியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் இவ்விபத்துக்கு காரணமாக பஸ் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரிஷாந்தன்

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

மக்களும் கட்சியும் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி