சூடான செய்திகள் 1

முகம் மற்றும் காதுகளை முழுமையாக மூடும் ஆடைத் தடை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தல்

(UTV|COLOMBO)  முகம் மற்றும் இரு காதுகளை முழுமையாக மூடுதலுக்கு தடை விதித்து அரசினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் நேற்று(25) கூடிய அமைச்சரவை குழுவில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ‘இரு காதுகள் உள்ளிடலாக முகத்தினை மூடுவது தடை’ எனும் சட்டத்திற்கு ‘முகத்தினை மாத்திரம் முழுமையாக மூடுவது தடை’ என திருத்தப்படவுள்ளதாக அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி பொது இடங்களில் தனி நபரின் அடையாளத்தினை இனங்கான முடியாத வகையில், முழுமையாக முகத்தினை மூடும் வகையிலான ஆடைகளை அணிவது வேறு பொருட்களால் முகத்தினை மறைத்திருத்தல் ஆகயவை குறித்த அதி விசேட வர்த்தமானியில் திருத்தப்பட்டு வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராயும் குழு நாளை(12) கூடவுள்ளது…

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்