வகைப்படுத்தப்படாத

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான். அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அன்று முழுவதும் பருவைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் மனம் சிந்திக்கும், என்னென்னவோ செய்வார்கள்.

அதே போன்று தலையில் பொடுகுத் தொல்லை இருக்கவே கூடாது. மேலும், ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் தடுக்க வேண்டும்.

வீட்டில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லைக்கு முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திவந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

 

 

Related posts

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கும்

India blown away by New Zealand

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை