சூடான செய்திகள் 1

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசங்களுடன் எவரேனும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்க முற்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலை பிரதானிகள் செயற்படவேண்டிய முறை தொடர்பில் விசேட கடிதமொன்றை பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த சம்பவங்களின் பாடசாலை முக்கியஸ்தர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

Related posts

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு