உள்நாடு

‘முகக்கவசம்’ இன்று முதல் கடுமையாக அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி,

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாததாலும், சரியான முறையில் முகக்கவசங்களை அணியாததாலும் கடந்த அக்டோபரில் இருந்து 53,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், முகக்கவசம் இல்லாதவர்களுக்கும், சரியாக முகக்கவசம் அணியாதவர்களுக்கும் இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

Related posts

மேலும் 520 பேர் குணமடைந்தனர்

கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தினை அரசாங்கம் அடக்கவில்லை – பிரதமர் ஹரிணி

editor