உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 778 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், மேல் மாகாணத்தில் நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 3,021 மோட்டார் சைக்கிள்கள், 2,645 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7,810 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி