உள்நாடு

மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனுவை மார்ச் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜிதவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு

திரிபோஷா பற்றிய புதிய தகவல்

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு