சூடான செய்திகள் 1

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகளை மீள் சுழற்சி செய்வதற்கான இயந்திரம் ஒன்றை தென்கொரியாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான யோசனையை முன்வைத்தார்.
மேற்படி குறித்த இயந்திரத்தின் மூலம் பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி, எண்ணெய் மற்றும் காபன் தூள்களாக மாற்ற முடியும் எனவும்  எண்ணெய்யை எரிபொருளாக பயன்படுத்தவும், காபன் தூளை வீதிக்கட்டுமானத்துக்கு பயன்படுத்தவும் முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம் மீண்டும் ஆரம்பம்

தெமட்டகொடை– மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை CID யினர் பொறுப்பேற்றனர்

ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி