உள்நாடு

மீண்டும் வைத்திய பணியில் ஷாபி ஷிஹாப்தீன்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் பணி இடைநிறுத்தம் செய்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் கட்டாய விடுப்புக் காலத்திற்குரிய அனைத்து ஊதியங்களையும் அவருக்கு வழங்கவும் பொதுச் சேவை ஆணைக்குழு சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியி பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக  சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இது நாடளாவியரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், 2019. மே 24, முதல் வைத்தியர் ஷாபியை கட்டாய விடுப்பில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்ச்சி வேதனைக்குரியது!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ? நிதியமைச்சகம் அனுமதி வழங்கவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா