உள்நாடு

மீண்டும் முட்டை விலையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – முட்டைக்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அடுத்த வாரமளவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான உற்பத்தி செலவினத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை அநீதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டைக்கான விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், நுகர்வோர் அதிகார சபை, வர்த்தக அமைச்சு மற்றும் தமது சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, முட்டைக்கான உற்பத்தி செலவீனம், போக்குவரத்து மற்றும் மின்கட்டணம் என்பவற்றை கருத்திற் கொண்டு உரிய விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

அபாயநிலையில் கொழும்பு – GMOA எச்சரிக்கை

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்