உள்நாடு

மீண்டும் முகக்கவசம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை .

(UTV | கொழும்பு) –

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். .

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கோவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன. இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் வைத்தியர் சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு : மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி பதில் கூறிய பிரதமர் ஹரினி | வீடியோ

editor