உள்நாடு

மீண்டும் நாட்டில் டெங்கு பரவும் அபாயம்!

(UTV | கொழும்பு) –

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் 2339 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் 14070 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13742 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4307 பேரும், மேல்மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள வளாகங்களை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

களுத்துறை மாவட்டத்திற்கு நீர் வெட்டு