கேளிக்கை

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா

(UTV | இந்தியா) – பிரபல நடிகை மீனா மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் கமல்ஹாசன், கௌதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார்.

இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குரியாக இருந்தது.

இந்நிலையில், திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் மீனா நடிப்பதை நடிகர் மோகன்லால் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மீனாவிற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோகன்லால், திரிஷ்யம் 2 படத்தின் செட்டிற்கு உங்களை வரவேற்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related posts

பக்ருவுக்கு கொரோனா தொற்று

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்