உள்நாடு

மீண்டும் இலங்கை வரும் இளையராஜா!

(UTV | கொழும்பு) –

இசைஞானி இளையராஜாவின் இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, உயிரிழந்ததையடுத்து இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், என்றும் ராஜா ராஜாதான் என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியினை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுவரித் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவைக்கு