விளையாட்டு

மீண்டும் ஆட்டத்திற்கு களமிறங்கும் பென் ஸ்டொக்ஸ்

(UTV|ENGLAND)-இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் பென் ஸ்டொக்ஸ் (Ben Stokes) மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரவு விடுதியில் முறைக்கேடாக நடத்துகொண்டதாக, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாட பென் ஸ்டோக்ஸ் தனது நண்பர் ஒருவருடன் இரவுநேர விடுதி ஒன்றுக்கு சென்று, அங்கு இளைஞர் ஒருவருடன் முரண்பட்டு மோதலில் ஈடுபட்டார்.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு, நிபந்தனையுடன் விடுதலையானார்.

அத்துடன், இங்கிலாந்து அணியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் பிரிஸ்டல் (Bristol) நகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர் குற்றமற்றவர் என நீதிபதி அவரை விடுதலை செய்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல்

மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இராஜினாமா

ஜோன் லெவிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்