(UTV | மியன்மார்) – மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்த சூழலில், மியன்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்ததை தொடர்ந்து மீண்டும் இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மியன்மாரில் நடைபெற்ற 2ஆவது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
