உள்நாடு

 மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்

(UTV | கொழும்பு) –   மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்
நாட்டில் நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார்.
நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டநேர மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுரைச்சோலை, நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்று (23) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி ஆலை, தற்போதுள்ள நிலக்கரி இருப்புகளை நிர்வகிக்கவும், வழக்கமான பராமரிப்புக்காகவும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இருந்தாலும் இதனால் ஏற்படும் மின்சார இழப்பு, ஏனைய கிடைக்கக்கூடிய வழிகளில் ஈடுசெய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் சம்பள உயர்வு முன்மொழிவிற்கு ஜீவன் தொண்டமான் வரவேற்பு!

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி அநுர – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

editor

ஒரே நாளில் 1350க்கும் மேற்பட்ட நியமனங்கள் வழங்கி அதிரடி காட்டிய ஆளுநர் செந்தில் தொண்டமான்.