உள்நாடுபிராந்தியம்

மின்பிறப்பாக்கி புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒரு மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கியிலிருந்து வந்த புகையை சுவாசித்ததில் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு | வீடியோ

editor