உள்நாடு

மின் துண்டிப்பு – அறிக்கை தொடர்பில் இன்று விசாரணை

(UTV|கொழும்பு) – கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று(24) கையளிக்கப்பட்டுள்ளது

இதன்படி மின்தடை குறித்த அறிக்கை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

திடீர் மின்தடை குறித்து ஆராய்வதற்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கையின் ஆரம்ப கட்ட ஆய்வு அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த ஆரம்ப கட்ட ஆய்வு அறிக்கை இன்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளவுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

களுத்துறை மாவட்ட கொவிட் தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை 50

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை