சூடான செய்திகள் 1

மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீர் விநியோகம் தடைப்படலாம்…

(UTV|COLOMBO) வறட்சி காலநிலை நிலவினாலும் நீர் விநியோகத்தை தடை செய்ய எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீரை பாய்ச்ச முடியாத காரணத்தினால் நீர் விநியோகம் தடைப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நீரை பாய்ச்சும் பிரதேசங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என தாம் மின்சார சபையிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

கடல் கொந்தளிப்பு

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது