உள்நாடு

மின்சாரம் இன்றி மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அவதி.

நேற்று மாலை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் பெருமளவில் அவதிக்கு உள்ளானார்கள்.
குறிப்பாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளானார்கள் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நேற்று 8 ம் திகதி 3 மணிக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு இரவு 9.30. க்கு மீண்டும் மின் இணைப்பு கிடைக்க பெற்றது.
இதனால் இந்த வேலையில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி விட்டனர்.
சிவராத்திரி விரதம் அதற்காக வந்த பக்தர்கள் மற்றும் உல்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் தரிசனம் செய்ய வந்த வயோதிபர் இளைஞர் யுவதிகள் சிறுவர்கள் மற்றும் கை குழந்தைகள் உட்பட அங்கு உள்ள அனைத்து வர்த்தகர்கள் பாரிய அசௌகரியத்தை எதிர் நோக்கினர்.
அதேபோல் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஆலயங்களில் பூஜைகள் நடத்த முடியாத நிலையில் தல்லப்பட்டனர்
இருதியாக இரவு 9.30. மணிக்கு மேல் மின் இணைப்பு கிடைக்க பெற்றது.

Related posts

தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் – 150 மி.மீ. வரை மழை – மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

editor

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor

அஸ்ட்ராஜெனெகா எதிரொலி : இலங்கையிலும் மூவர் பலி